வீட்டிலிருந்து கொண்டு வேலைபார்த்தல்

மென்பொருள் உருவாக்கம் உட்பட கணிப்பொறி சார்ந்த வேலைகளில், கோவிட் தொற்றுக்காலத்துக்குப் பிறகு வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு உழைத்தல் என்பது வெகுசாதாரணமான ஒன்றாக ஆகிவிட்டது. கோவிட் தொற்றுக்கு ஏறத்தாழ பத்து வருடங்கள் முன்பிலிருந்தே அவ்வப்போது வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு உழைத்த வகையில் எனக்கு அறிமுகமான ஒன்றுதான். இம்முறையில் வேலை பார்ப்பதை 2007ம் வருடத்தில்தான் முதன்முதலில் கேள்விப்பட்டிருந்தேன். நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளின் மகன் BPO நிறுவனம் ஒன்றில் இரவுநேரப்பணியில் ஈடுபட்டிருந்தார். சமயங்களில் பகலிலும் வேலைபார்க்க வேண்டி வந்தபோது அவ்வாறு வீட்டிலிருந்தபடியே வேலைபார்ப்பதை … Continue reading வீட்டிலிருந்து கொண்டு வேலைபார்த்தல்

பதிப்பகத் தொழில்

கூடுதலாக வருமானம் தரவல்ல ஒரு வேலை வேண்டும்; சமூகத்துக்கு தொண்டாகவும் அது இருக்க வேண்டும்; இலக்கியம் சார்ந்ததாக இருந்தால் இன்னமும் நலம்; முக்கியமாக செய்வதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் என் தேவைகளின் அடிப்படைகளிலும், இயல்பின் அடிப்படையிலும் செய்ய ஏதுவான வேலை ஒன்றை 2017ம் ஆண்டில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் முன்னர் அவர் தளத்தில் எழுதிய “இணைய உலகமும் நானும்” என்ற கட்டுரை நினைவுக்கு வந்தது. அதில் பெரியசாமி தூரன் அவர்களின் கலைக்களஞ்சியத்தை இணையத்தில் … Continue reading பதிப்பகத் தொழில்

வீட்டிலிருந்து கல்வி – 7

(முந்தைய பதிவு) ஜெனிவாவில் பள்ளியில் படித்த அனுபவம் இருப்பதால் இந்தியாவில் பள்ளிக்கு அனுப்பினால் மகள்கள் சமாளித்து விடுவார்கள் என்றே முதலில் தோன்றியது. இருப்பினும், எப்படியும் கோவிட் காலம் என்பதால் பள்ளியில் சேர்த்தாலும் இணையம்வழி கல்விதானாகையால் பெரிய பயனிருக்காது என்று எண்ணி பள்ளியில் சேர்ப்பதை தவிர்த்தோம். செப்டம்பர் 2020லிருந்து ஜூன் 2021 வரை பிள்ளைகள் வீட்டிலிருந்தேதான் படித்தார்கள். மேலும் நாங்களும் வரிசையாக ஒவ்வொருவராக கோவிட் தொற்று ஏற்பட்டு சிரமப்பட்டதால் பள்ளிக்கு அனுப்புவதை சிந்திக்கக்கூட நேரமின்றி பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தோம். … Continue reading வீட்டிலிருந்து கல்வி – 7

வீட்டிலிருந்து கல்வி – 6

(முந்தைய பதிவு) கோவிட் பொதுமுடக்கம் ஜெனிவாவில் தொடங்கியதும் தெருக்கள் முழுக்கவே வெறிச்சோடின. அதுவும் நாங்கள் தங்கியிருந்த பகுதி பரபரப்புக்கும் கொண்டாட்டத்துக்கும் பெயர் பெற்றது. அப்படிப்பட்ட இடத்தின் தெருக்கள் முழுக்க காலியாக இருந்ததே மனதில் அச்சத்தை பரப்பியது. இவை ஒருபுறமிருக்க ஜெனிவாவிலும் வீட்டிலிருந்து கல்வி என்பதை சாத்தியப்படுத்த முயன்றதில் எனக்கு மகிழ்ச்சிதான். அதுவும் சென்னையைப் போலன்றி நானும் எந்நேரமும் வீட்டில் இருக்க முடிந்ததும், அலுவலக வேலையில் பளு என எதுவும் இல்லாதிருந்ததும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. பள்ளியைப் பொறுத்தவரை தினமும் … Continue reading வீட்டிலிருந்து கல்வி – 6

வீட்டிலிருந்து கல்வி – 5

(முந்தைய பகுதி) நாட்கள் செல்லச் செல்ல ஹரிணி இயல்பாகிக் கொண்டே வந்ததை உணர முடிந்தது. தயக்கங்கள் ஒருபுறம் தென்பட்டதுதான் என்றாலும் அவள் மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிந்தது. வகுப்பிற்குள் அவளுக்கென ஒரு நட்பு வட்டம் அமைந்து விட்டிருந்தது. அவ்வப்போது நான் அவளை காலையில் பள்ளியில் விட்டுவிட்டு அங்கிருந்து நேராக அலுவலகம் செல்வேன். வகுப்புவாரியாக மாணாக்கர்கள் வரிசையில் நிற்க, மணியடித்தபின் அந்தந்த வகுப்புகளின் ஆசிரியர்கள் வந்து அவர்களை அழைத்துச் செல்வர். அந்த இடைப்பட்ட பொழுதுகளில் அவள் இன்னும் இரண்டு … Continue reading வீட்டிலிருந்து கல்வி – 5

வீட்டிலிருந்து கல்வி – 4

(முந்தைய பதிவு) ஸ்விஸ் பயணம் முடிவானதுமே அந்த நாட்டில் வீட்டிலிருந்து கல்வி என்பதை அனுமதிக்கிறார்களா என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன். ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்தேன். உதாரணமாக ஜெர்மனியில் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது என்பது சட்ட விரோதம். அவ்வாறு பள்ளிக்கு அனுப்பாமல் இருந்த பெற்றோர் காவலர்களால் கைது செய்யப்பட்டிருந்தது செய்தியாகவே வந்திருந்தது. ஸ்விஸ்ஸில் எப்படி என தேடிப் பார்த்தபோது, “வீட்டிலிருந்து கல்வி என்பது அனுமதிக்கப்பட்டுள்ளதுதான். ஆனால் … Continue reading வீட்டிலிருந்து கல்வி – 4

வீட்டிலிருந்து கல்வி – 3

(முந்தைய பதிவு) மேற்கொண்டு தொடரும் முன் ஹரிணி முதலாம் வகுப்பு படித்த பள்ளி முதல்வர் சார்ந்து இறுதியாக சில வார்த்தைகள். அவளுடன் படித்த இன்னொரு மாணவனின் குடும்பத்தில் அடுத்த வருடங்களில் பொருளாதார சிக்கல்கள் வலுவாக எழுந்தன. அவனது தந்தை நோயுற்றதன் காரணமாக தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியவில்லை. அவனது அம்மா ஐஸ்வர்யாவின் தோழி. தனியாக நின்று இன்றுவரை குடும்பத்தை தாங்கி வருகிறார். அவருக்கு படிப்பு பெரிதாக இல்லை என்பதால் வீட்டு வேலை, தையல் வேலை என பலவற்றை … Continue reading வீட்டிலிருந்து கல்வி – 3

வீட்டிலிருந்து கல்வி – 2

(முந்தைய பாகம்) ஹரிணி முதலாம் வகுப்பு படித்த பள்ளி ஒரு கிறிஸ்தவப் பள்ளி. அவ்வருடத்தைய பள்ளி வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னர், அதன் முதல்வர் புதிதாக பள்ளியில் இணையவிருக்கும் மாணாக்கர்களின் பெற்றோர்கள் அனைவரையும் அழைத்து ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். பள்ளி மைதானத்தில் நாற்காலிகள் இடப்பட்டு அவற்றில் நாங்களும், மேடையில் முதல்வருமென அமைய சந்திப்பு தொடங்கியது. பிற சந்திப்புகளைப் போல மைக்கிற்கு என போடியம் அமைத்து அதில் நின்று பேசாமல் ரிமோட்டில் இயங்கும் மைக் ஒன்றை தன் தலையில் … Continue reading வீட்டிலிருந்து கல்வி – 2

வீட்டிலிருந்து கல்வி – 1

“எந்த க்ளாஸ்ம்மா படிக்கிற?” அதுவரை நன்றாக பேசிக்கொண்டு வந்த எங்கள் மூத்த மகளான ஹரிணி அமைதியாகி பக்கத்தில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்தாள். 2017ம் வருடத்தில் சென்னையிலிருந்து புதுக்கோட்டை நோக்கிய ரயில் பயணத்தில் என்னெதிரே இருந்தவர் ஹரிணியின் பார்வையைத் தொடர்ந்து வந்து என்னைப் பார்க்க நான் அசௌகரியமாக உணர்ந்தேன். ஏற்கனவே பலமுறை ஒத்திகை பார்த்த பதில்தான். இருப்பினும் இவ்வாறு சட்டென பொது இடத்தில் அதை சொல்வதற்கு மிகவும் தயக்கமாக இருந்தது. “பள்ளிக்கூடம் அனுப்புறதில்லங்க” “பின்ன!?” “நாங்களே வீட்டில வச்சு … Continue reading வீட்டிலிருந்து கல்வி – 1

சபரிமலைப் பயணம் – 2

கிளம்பும் நாளன்று இருமுடியை தயார் செய்யும்போது ஏதாவது பிரார்த்தனை இருந்தால் மனதில் வேண்டிக்கொள் என்றார்கள். அதுவரை எந்தவித பிரார்த்தனைகளும் உண்மையிலேயே இல்லை. அந்தக் கணத்தில் என்ன வேண்டிக்கொள்வது என தடுமாறி, நோய்வாய்ப்பட்டிருந்த என் சித்தி நோயிலிருந்து மீண்டுவர வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அவர் மிகவும் நல்லவர். என் மீதெல்லாம் மிகவும் பாசமுள்ளவர். தோற்றத்தில் என் அம்மாவைப் போன்றே இருப்பார். அவர் நோயினால் தொடர்ந்து கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்தது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்நோயிலிருந்து அவர் மீண்டு வரவேண்டும் … Continue reading சபரிமலைப் பயணம் – 2