நிரப்பிகள்

நாம் மற்றவரிடம் பேசும்போது, சொல்லிக்கொண்டிருக்கும் கருத்தில் நமக்கு உள்ள தயக்கத்தையோ அல்லது மேற்கொண்டு வார்த்தைகள் கிடைக்காமல் தத்தளிப்பதையோ அல்லது சும்மாவேனும் ஒரு இடைவெளி விட விரும்புவதையோ குறிப்புணர்த்துவதற்காக, நாம் பேசிக்கொண்டிருக்கும் வாக்கியத்தில் அங்கங்கே நுழைத்து சொல்லும் அர்த்தமில்லாத அல்லது அர்த்தமுள்ள சொற்கள், சொற்றொடர்கள் அல்லது ஒலிகள் என கூகிளாரின் உதவிகொண்டு நிரப்பிகள் (fillers) என்னும் வார்த்தையை வரையறுக்க விழைகிறேன். இந்தியர்களைப் பொறுத்தவரை தாய்மொழி நிரப்பிகள், ஆங்கில மொழி நிரப்பிகள் என இதை இரண்டாக பிரிக்கலாம். ஹிந்தி முதலான … Continue reading நிரப்பிகள்

புனைவாசிரியன் மீதெழும் பொறாமை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் “பகடையாட்டம்” நாவல் குறித்து அவரது படைப்புகளை வாசித்து உரையாடும் யுவசுக்கிரி குழுமத்தில் நான் பேசியதன் சற்றே விரிவாக்கப்பட்ட வடிவம். கதைச்சுருக்கமாக, திபெத்தை போன்றதேயான சோமிட்ஸியா என்ற கற்பனை நாட்டிலிருந்து அதன் அதிபரும் தலைமை ஞானியுமான ஸோமிட்ஸூ, அரசியல் பகடையாட்டத்தால் அங்கிருந்து தப்பி இந்தியா வரும்போது இந்திய எல்லையில் நடக்கும் சம்பவங்கள், பவவிதங்களில் அந்நிகழ்வுகளோடு தொடர்புடைய பல்வேறு கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் ஆகியவற்றை சொல்லும் நாவல் இது. இருநூறு பக்கங்கள் நீளும் … Continue reading புனைவாசிரியன் மீதெழும் பொறாமை

அழைப்பு

கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்த 2020ன் ஜூலை மாதம். ஸ்விஸ்ஸில் அது கோடைகாலம் என்பதால் வெயில் நன்கு அதிகரித்திருந்தது. கூட வேலைபார்க்கும் உள்ளூர்க்காரர் ஒருவர் ஒருமுறை, நான் அலுவலகத்தில் வியர்வையால் நனைந்திருப்பதைக் கண்டு, “இந்தியாவைப் போலவே உணர்கிறாயோ” என்று சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, “இந்த நற்பொழுதில் ஜெனிவா நகரத்தின் ஏரிக்கு சென்று உடைகளைக் களைந்து நீந்திக் களிக்க வேண்டும். நானோ இப்படி கணினிகளுடன் போராடிக் கொண்டிருக்க வேண்டியதாகி இருக்கிறது” என சலித்துக் கொண்டார். அவர் சொன்னதுபோல அந்த … Continue reading அழைப்பு

இசையில் நிறைந்த தருணங்கள்

சுக்கிரி இலக்கிய குழுமத்தின் நண்பர்களில் ஒரு பகுதியினர் யுவசுக்கிரி என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் இணையம் வழி இணைந்து, எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் ஒவ்வொரு நாவலாக எடுத்து வாசித்து உரையாடி வருகிறோம். யாரேனும் இருவர் இரு தனி தலைப்புகளில் பேச, அதையொட்டி மற்றவர்களும் இணைந்து உரையாடும் வடிவத்தை கொண்டுள்ளன இந்நிகழ்வுகள். இதில் பிப்ரவரி மாதத்திற்கான நூலான “கானல் நதி” நாவலை குறித்து நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். பதின்ம வயதில் படித்த ஒரு நாவலில், … Continue reading இசையில் நிறைந்த தருணங்கள்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!

கண்பார்வை குறைபாட்டை தெளிவாகவே உணர ஆரம்பித்தபிறகு இனிமேலும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்று கிளம்பிச் சென்று கண்களை சோதனை செய்துகொண்டேன். “அவ்வளவு பிரச்சனை இல்லை என்றாலும் ஓரளவு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது, கண்ணாடி போட்டுக்கொள்ளுங்கள்”என அறிவுறுத்தினார்கள். கிட்டப்பார்வையா தூரப்பார்வையா எதில் குறைபாடு என கேட்டதற்கு இரண்டிலுமே பிரச்சனை இருக்கிறது , மேலும் நாற்பதை தாண்டிவிட்டதால் படிக்கவும் கண்ணாடி தேவைப்படும் என்ற பதிலை பெற்றேன். பின்னர் இதை “இலக்கியத்தில் கிட்டப்பார்வை, லௌகீகத்தில் தூரப்பார்வை” என்று மாற்றி நான் சொன்ன நகைச்சுவை … Continue reading கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!

உடனுறங்குதல்

புதுப்பேட்டை படத்தில் ஏற்கனவே தாதாவாக இருக்கும் மூர்த்தி என்பவரை எதிர்த்து, தன் குருவான அன்புவைக் கொன்று புது தாதாவாக மேலெழுந்து வரும் நாயகன் கொக்கி குமாரின் வளர்ச்சியை, ஒரு நல்ல உத்தியை கடைபிடித்து காட்டியிருப்பார் இயக்குநர். சென்னையின் வரைபடத்தில் மூர்த்தி ஏரியா என்று வண்ணமிட்டுக் காட்டப்பட்ட பகுதிகள் குறைந்துகொண்டே வர, கொக்கி குமாரின் ஏரியா என வண்ணமிடப்பட்ட பகுதி வளர்ந்து பரவி, மூர்த்தியின் ஏரியாவை தேய்த்து கரைத்து ஆக்கிரமிக்குமாறு காட்டப்பட்டிருக்கும். குழந்தைகளுடனுறங்குவது என்பதும் அதுபோன்ற ஒரு அனுபவமே. … Continue reading உடனுறங்குதல்

வரம்–சிறுகதை குறித்து…

ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை மாலை நடைபெறும் சுக்கிரி குழும ஸூம் உரையாடலில் நேற்று (11/09/2021) எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் புனைவுக் களியாட்டு தொகுப்பின் நூறாவது கதையான “வரம்” சிறுகதை பற்றி நான் பேசியதன் சற்றே திருத்தப்பட்ட வடிவம். ஆசான் தனது அரதி என்னும் கட்டுரையில், மரபார்ந்த மருத்துவர்கள் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு அரதி மனநிலை பீடித்திருக்கும்போது, அனுமனை அல்லது பிள்ளையாரை வணங்கச் சொல்வது உண்டு என எழுதியுள்ளார். அனுமன் வீரத்தின் சின்னம் என்றும் பிள்ளையார் ருசியின் சின்னம் என்றும் … Continue reading வரம்–சிறுகதை குறித்து…

லாசர் – சிறுகதையைப் பற்றி

இந்த நோயச்ச காலத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் “புனைவுக் களியாட்டாக” எழுதிய நூறு கதைகளில் அறுபத்தோராவது கதை “லாசர்”. அவரது வாசகர்களாக அறிமுகமாகி, நண்பர்களானவர்கள் பலரில் சிலர் சேர்ந்துகொண்டு வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு கதையை எடுத்துக்கொண்டு இணையம் வழியாக சந்தித்து விவாதித்தும் உரையாடியும் வருகிறோம். அவ்வகையில் நேற்று (28.11.2020 அன்று) இக்கதை பற்றி நான் பேசியதன் சற்று மாறுபட்ட வடிவம். லாசர் கதையில் அந்தக் குழந்தையின் இறப்பு என்பது லாசருக்கும் அவனுடைய பெற்றோருக்குமே இறப்பு என்றாகிறது. பைபிளில் … Continue reading லாசர் – சிறுகதையைப் பற்றி

பெருங்கனவின் முடிவில்…

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெண்முரசு நாவல் வெளிவருவது இன்றோடு (16.07.2020) நிறைவடைந்திருக்கிறது. ஒரு பெரிய கனவு கண்டு விழித்ததுபோலத்தான் உணர்கிறேன். 2014ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அத்தியாயம் என ஏழாண்டுகள் தொடர்ந்து எழுதியிருக்கிறார். 2013ம் ஆண்டு டிஸம்பரில் இவ்வாறு வெண்முரசு என்ற தலைப்பில் வெளிவர ஆரம்பிக்கவிருப்பது குறித்த அறிவிப்பு வெளிவந்தபோதே பரவசமாக இருந்தது. சிறுவயதிலிருந்தே மஹாபாரதத்தை மிக ஆர்வமாக படித்தும் கேட்டும் பார்த்தும் வந்திருக்கிறேன். தூர்தர்ஷனில் வெளிவந்த மஹாபாரதம், … Continue reading பெருங்கனவின் முடிவில்…

செய்திதுறத்தல் – என் அனுபவங்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு 2018ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் செய்திதுறத்தல் என்னும் பதிவு வந்தது (சரியாக இரண்டு வருடம் இரண்டு நாள் முன்பு). மலையாள பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் மரணத்தையொட்டி “இனிமேல் செய்திகள் எவற்றையும் படிப்பதில்லை” என்ற முடிவை எடுத்தார். அதையொட்டி நானும் அந்த முடிவுக்கு வந்தேன். அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த மனநிலைகளை நானும் அச்சமயத்தில் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில், சமூக ஊடகங்கள் நம்மை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பது குறித்த … Continue reading செய்திதுறத்தல் – என் அனுபவங்கள்